அரசநகரி அழகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED :648 days ago
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரசநகரி கிராமத்தில் அருள் பாலிக்கும் கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. இக்கோயிலில் 19 தொடங்கி 31 ஆம் ஆண்டு ஆடி பொங்கல் விழா நடக்கிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு கரகம் எடுத்தல், உற்சவர் அம்மன் வீதி உலா மற்றும் பெண்கள் பூக்கடைகளை சுமந்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து அம்மன் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது. இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பொங்கல் விழாவும், பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர் கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.