உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா துவக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா துவக்கம்

ராமேஸ்வரம்; ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழாவுக்கு பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.


ராமநாதசுவாமி கோயிலின் ஆடித் திருக்கல்யாண திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்பாள் சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்தில் கோயில் தலைமைக் குருக்கள் உதயக்குமாா் தலைமையில் சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதன் பிறகு கொடிமரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் பிரியவிடைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !