/
கோயில்கள் செய்திகள் / திருமலையில் கருட பஞ்சமி; தங்க கருட சேவை.. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
திருமலையில் கருட பஞ்சமி; தங்க கருட சேவை.. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ADDED :418 days ago
திருப்பதி: திருமலையில் கருட பஞ்சமியை முன்னிட்டு கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் மாதந்தோறும் பெளா்ணமி இரவுகளில் திருப்பதி தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. இதை தவிர கருட பஞ்சமி நாளிலும் இங்கு கருட சேவை சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி நேற்று கருட பஞ்சமி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின் நேற்று இரவு 7 மணிக்கு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிந்தா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.