உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவந்தி ஒய்யவந்தாள் அம்மன் கோயிலில் மழை வேண்டி கரக உற்சவ விழா

பூவந்தி ஒய்யவந்தாள் அம்மன் கோயிலில் மழை வேண்டி கரக உற்சவ விழா

பூவந்தி; பூவந்தி பந்தலுடய அய்யனார், ஒய்யவந்தாள் அம்மன் கோயிலில் மழை வேண்டி கரக உற்சவ விழா நடந்தது. அய்யனார் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் மழை வேண்டி கரகம் சுமந்து ஊர்வலமாக வந்து வேண்டி கொள்வது வழக்கம், இந்தாண்டு திருவிழா ஆகஸ்ட் 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 8ம் நாள் திருவிழவை முன்னிட்டு அய்யனாருக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் பூவந்தி கண்மாய்க்கு ஊர்வலமாக சென்று தீர்த்தம் எடுத்து கரகம் ஆடி வந்தனர். பின் கோயில் முன் தீக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகிருஷ்ணன், நீர்ப்பாசன சங்க தலைவர் மாரி, சக்கரவர்த்தி, கண்ணன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !