/
கோயில்கள் செய்திகள் / வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி
ADDED :440 days ago
ராமேஸ்வரம்; வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் புரோகிதர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கேரளா வயநாடு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கு மேலான மக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியதால், சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இந்நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரை புரோகிதர்கள் சங்கம் சார்பில் வயநாட்டில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி இன்று புரோகிதர்கள் சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரேசன், உதவிச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சுப்ரமணியன், புரோகிதர்கள் பலரும் சங்கல்ப பூஜை செய்து அக்னி தீர்த்தத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.