திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 1008 விளக்கு பூஜை
ADDED :495 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். அமராவதி புதுார் சாரதா மகளிர் கல்லுாரி சாரதேஸ்வரி பிரியா திருவிளக்கு ஏற்றினார். வக்கீல் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். திருவாடானை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலிலும் திருவிளக்கு பூஜை நடந்தது.