உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயணர் கோவிலில் சுதர்சன ஹோம வழிபாடு

குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயணர் கோவிலில் சுதர்சன ஹோம வழிபாடு

 மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. லட்சுமி நாராயணர், பெருந்தேவி தாயார், ஆண்டாள், பனிரெண்டு ஆகியோர் ஆழ்வார்கள் வீற்றுள்ளனர். திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின்கீழ், இக்கோவில் நீண்டகாலம் இருந்தது.

மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம், அங்கு உள்ளதாலும். ஸ்தலசயன பெருமாள், அக்கோவிலுக்கு பார்வேட்டை செல்வதாலும், கடந்த 2022ல், மாமல்லபுரம் கோவில் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது. ஒரு கால பூஜை கோவில் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவில் வழிபாடு முன்னேற்றம், உலக மக்கள் நன்மை வேண்டி, அவ்வப்போது சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்றும், சிறப்பு வழிபாடாக, லட்சுமி நாராயணர், தேவியர், சக்கரத்தாழ்வார் ஆகியோருடன் எழுந்தருளி, சுதர்சண ேஹாமம் நடத்தப்பட்டது. பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர். மாலை, சுவாமி, தாயார் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !