காட்டுவனஞ்சூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :415 days ago
சங்கராபுரம்; காட்டுவனஞ்சூரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காத்தவராயன்–ஆரியமாலா திருகல்யாண வைபவம் நடந்தது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.