வராஹி அம்மன் தேய்பிறை பஞ்சமி வழிபாடு; தேங்காய் விளக்கு பக்தர்கள் வழிபாடு.
ADDED :417 days ago
சிவகங்கை; சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியில் உள்ள வராஹி அம்மன் கோயிலில் ஆவணி தேய்பிறை பஞ்சமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
அம்மனுக்கு பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணத் திரவியங்கள் கொண்டு அபிேஷகம் நடந்தது. குங்குமத்தால் அர்ச்சனை செய்து நான்கு முக தீபம், பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வராஹி அம்மனுக்கு தேங்காய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.