/
கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜென்மாஷ்டமி; மதுரா கிருஷ்ணன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. பாடல்கள் பாடி பரவசம்
கிருஷ்ண ஜென்மாஷ்டமி; மதுரா கிருஷ்ணன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. பாடல்கள் பாடி பரவசம்
ADDED :422 days ago
மதுரா, உத்தரபிரதேசம்: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவிலில் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். காத்திருந்து, கண்ணன் பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இங்கு கோவிலின் அனைத்து பகுதிகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை துவங்கிய விழா நள்ளிரவு வரை நடைபெறும்.