உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

திருவண்ணாமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை மற்றும் சுற்று பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.


திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள வேணுகோபால் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் பாமா, ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள ராதாகிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில்  ராதா -கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் கலையரங்கத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் கிருஷ்ணர் வேடத்தில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !