காட்டு மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED :441 days ago
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவிநாசி ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம் ஆகியவையுடன் நடைபெற்றது. இதில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீ இராஜ சரவண மாணிக்கசுவாமிகள் தலைமையில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விஜயகுமார சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.