காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் விமான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி
ADDED :415 days ago
காரைக்கால்; காரைக்கால் கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோவிலில் அனைத்து விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்கள் விமான பாலஸ்தாபனத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி விநாயகர் பூஜையுடன் விழா துவக்கியது.கடந்த 29ம் தேதி பரிவார விமான கலாகர்ஷணம், பிரதான விமான கலாகர்ஷணம்,யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை யாகசாலை முடிந்து பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்களுடன் பாலஸ்தாபனம் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை திருப்பணி முகூர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.