சோமவார அமாவாசை; நாகலிங்கத்தை வணங்கிய பக்தர்கள்
ADDED :422 days ago
திருக்கோவிலூர்; சோமவார அமாவாசையை முன்னிட்டு மணம்பூண்டி ரகோத்தமர் மூலபிருந்தாவன வளாகத்தில் பக்தர்கள் நாகலிங்கத்தை வணங்கி வழிபட்டனர். திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவார அமாவாசை என அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் அரசமரம், ஆலமரம், வேப்பமரம் ஒருசேர இருக்கும் இடத்தில் உள்ள நாகலிங்கத்தை வலம் வந்து, தீபமேற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ரகோத்தமர் மூலம் பிருந்தாவன வளாகத்தில் அமைந்திருக்கும் அரசமர நாக லிங்கத்தை நேற்று அதிகாலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் வலம்வந்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிருந்தாவன நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.