சதுர்த்தி விழா: ராமேஸ்வரம் கோயிலில் விநாயகர் ஊர்வலம்
ADDED :725 days ago
ராமேஸ்வரம்; விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடானார். கோயில் ரதவீதி, திட்டக்குடி, சீதா தீர்த்தம் வழியாக விநாயகர் வீதிஉலா சென்று காட்டுபிள்ளையார் கோயிலில் எழுந்தருளினார். வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் ராமமூர்த்தி, பிரபாகரன் தலைமையில் நகர் முழுவதும் 50 இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை முடிந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (செப்., 8) ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட உள்ளன.