தக்ஷிண விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :426 days ago
மந்தாரக்குப்பம்; பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் 21 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. நேற்று இரவு விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிக்தி, புக்தி சுவாமிகளுக்கு முறைப்படி பெண்அழைப்பு, சீர்வரிசை, பூ, பழங்கள், இனிப்புகள், ஊர்வலமாக எடுத்து சென்று மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. அப்போது பஜனை பாடல்கள் பாடி ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.