/
கோயில்கள் செய்திகள் / பிரதமர் மோடி இல்லத்தில் நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் கன்றுக்குட்டி ஈன்ற பசு!
பிரதமர் மோடி இல்லத்தில் நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் கன்றுக்குட்டி ஈன்ற பசு!
ADDED :453 days ago
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமரின் அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இது குறித்து பிரதமர் தனது வீட்டில் கன்றுக்குட்டியுடன் நேரத்தை செலவிடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது; வேதங்களில் (Gaavh Sarvasukh Pradaah) பசு அனைத்து உயிரினங்களுக்கும் தாயாக இருந்து அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. அன்பிற்குரிய தாய் பசு ஒரு புதிய கன்று ஈன்றுள்ளது, அதன் நெற்றியில் ஒளியின் அடையாளம் உள்ளது. எனவே, அதற்கு தீபஜோதி என்று பெயரிட்டுள்ளேன்," என்று மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.