காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :696 days ago
காரியாபட்டி; காரியாபட்டியில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு புரட்டாசி முதல் செவ்வாயை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பால், திருமஞ்சனம், தயிர், சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு நடந்தது. வண்ண மலர்களால் அலங்காரம் செய்யபட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.