புரட்டாசி சனி வாரம் : பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :394 days ago
போடி; புரட்டாசி 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜை, சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து செய்திருந்தார்.
* போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.