கொடுவாய் நாகேஸ்வர சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :395 days ago
பொங்கலூர்; திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு கொடுவாய் கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வர சுவாமி கோவிலில் கைலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் கொடுவாய் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி சிவனடியார் திருக்கூட்ட நிறுவனர் திருக்கழுக்குன்றம் தாமோதரன் தலைமையில் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவாசகம் படித்தனர்.