உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

வத்தலக்குண்டு; வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா மஞ்சளாற்றில் கரகம் எடுத்து வருவதுடன் துவங்கியது. வான வேடிக்கை,மேளதாளம் செண்டை மேளத்துடன் கோயிலுக்கு கரகம் அழைத்து வரப்பட்டது. விழாவில் முதல் நிகழ்வாக நாட்டில் ஒற்றுமை நிலவவும் மனித நேயம் செழிக்கவும் வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. சக்தி வடிவிலும், சிவன் வடிவிலும் சங்குகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்வி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !