காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் வெண்பட்டு குடை சூழ உலா வந்த சுவாமி
ADDED :691 days ago
காரமடை; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நவராத்திரி வைபவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் வெண்பட்டு குடை சூழ ரங்கநாயகி தாயார் திருக்கோவில் வலம் வந்தார். ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.