மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவில் மஹா சண்டீ ஹோமத்தில் 108 சுமங்கலி பூஜை
ADDED :375 days ago
புதுச்சேரி; மகா சண்டீ ஹோம நிகழ்ச்சியையொட்டி, இன்று நடந்த 108 சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை நிகழ்ச்சியையொட்டி, ஸ்ரீ வித்யா மகா மண்டபத்தில், குரு பூஜை, கோ பூஜை, வருஷபபூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சப்தசதி பாராணயம், மகா லட்சுமி ஹோமம், யோகினி பைரவ பூஜை ஆகியவை நேற்று நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை, மகா பூர்ணாஹூதி, வசோர் தாரை, கலச புறப்பாடு ஆகியவை நடந்தது. சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஹோமம் மற்றும் பூஜைகள் கீதா ராம் குருக்கள் தலைமையில் நடந்தது.