பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :4719 days ago
வேலூர்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே, பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 19ம் தேதி மஹா சாந்தி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை விழா நடந்தது. நேற்று காலை, 7.30 மணியளவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. வெங்கடசேஷ பட்டாச்õரியார் தலைமையிலானோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். இரவு, 8 மணிக்கு, ஸ்வாமி திருவீதி புறப்பாடு நடந்தது. ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.