உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் கந்தசஷ்டி விழா; நாளை சூரசம்ஹாரம்

திருமலைக்கேணியில் கந்தசஷ்டி விழா; நாளை சூரசம்ஹாரம்

நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இன்று காலை முருகப் பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளை மாலை 3 மணிக்கு மேல் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !