மேலும் செய்திகள்
ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
303 days ago
அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
303 days ago
அழகு வள்ளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
303 days ago
சென்னை; தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், வெங்டேஷ்வர பெருமாளுக்கு நாளை பிற்பகல் புஷ்பயாகம் நடக்கிறது. இதையொட்டி, பக்தர்களிடம் இருந்து மலர்கள் வரவேற்கப்படுகின்றன.திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்திற்கு பின், உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அதேமுறையில், சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், வெங்கடேஸ்வர பெருமாளுக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை பிற்பகல், 2:30 மணிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. முன்னதாக காலை, 9:00 மணிக்கு ஹோமமும், 11:00 மணிக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. இந்த புஷ்ப யாகத்திற்கு தேவையான துளசி, சாமந்தி, மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, நித்யமல்லி, ஜாதிமுல்லை, மருவு, தவனம், தாமரை, விருச்சி, மனோரஞ்சிதம், செண்பகம், ரோஜா, மகிழம், தாழம்பூ ஆகிய மலர்கள், பக்தர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. மலர்களை வழங்க விரும்புவோர், நாளை நண்பகல் 12:00 மணிக்குள், கோவிலின் சுவர்ணம் அரங்கில் கொடுக்கலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
303 days ago
303 days ago
303 days ago