உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் டூவீலர் நிறுத்தம்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் டூவீலர் நிறுத்தம்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பு, வசதிக்காக கோயில் ரத வீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி நடந்து சென்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் கிழக்கு ரத வீதி சாலையில் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் டூவீலர்கள் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் ரதவீதி சாலையில் டூவீலர்கள் மற்றும் நடைபாதையில் கடைகளால் ஆக்கிரமித்து பக்தர்கள் சிரமத்துடன் நடந்து சென்று அவதிப்படுகின்றனர். கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்படும் டூவீலர்களை அப்புறப்படுத்த ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்கள், நடைபாதை கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !