மேலும் செய்திகள்
குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்
301 days ago
குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்
301 days ago
தஞ்சாவூர்; பாபநாசத்தை அடுத்த களஞ்சேரி கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அமைந்துள்ளது. அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கல்யாண கிருஷ்ணருக்கு ஆண்டுதோறும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சனிக்கிழமை காலை தோடய மங்கலம், குரு கீர்த்தனைகள், அஷ்டபதி ஆகிய பஜனை பாடல்கள் பாடப் பெற்று இரவு திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிறு காலை ஸ்ரீ கல்யாண கிருஷ்ணர் திருமண கோலத்தில் காட்சியளித்தார். பெண்கள் மங்கல பொருட்களை சீர்வரிசையாக மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வளமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து மாங்கல்யதாரணமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரின் பஜனை பாடல்களை மனமுருகி பாடி வழிபட்டனர். திருவிசநல்லூர் ராம கிருஷ்ண பாகவதர் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர். ஏற்பாடுகளை களஞ்சேரி சீதாராமன், சாம்ப வைத்தியநாதன், பாஸ்கர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
301 days ago
301 days ago