உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோவிலில் 108 புடவை சார்த்துதல்!

ஆண்டாள் கோவிலில் 108 புடவை சார்த்துதல்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், கார்த்திகை மாத, "கைசிக ஏகாதசியை முன்னிட்டு, 108 புடவைகள் சார்த்தப்பட்டன. கோவிலில், நேற்று முன்தினம், அர்த்த சாம பூஜை நடந்தது. பின், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் புறப்பட்டு, கோபால விலாசம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.ஆண்டாள், ரெங்கமன்னார், வடபத்ரசாயி, ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வாருக்கு, 108 புடவைகள் சார்த்துதல், அரையர் வியாக்யானம், வேதபிரான் பட்டர் வேத புராணம் வாசித்தல் நடந்தது.வேதபிரான் பட்டர், மேள தாளத்துடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலையில் புடவைகள் களையப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !