உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்ஸவம்; நுாபுரகங்கையில் நீராடிய கள்ளழகர்!

அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்ஸவம்; நுாபுரகங்கையில் நீராடிய கள்ளழகர்!

அலங்காநல்லுார் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.


தைலக்காப்பு திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகர் சுந்தரராஜபெருமாள் அழகர்மலை அடிவாரத்தில் இருந்து பல்லக்கில் மலைபாதை வழியாக மலைஉச்சியில் உள்ள நுாபுரகங்கைக்கு சென்றார். அங்கு மாதவி மண்டபத்தில் பெருமாளுக்கு பல்வேறு வகை வாசனை திரவியங்கள் மூலம் திருத்தைலம் சாத்தப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. பின் நூபுரகங்கை தீர்த்தத்தில் சுவாமி நீராடினார். சுவாமிக்கு புஷ்ப சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !