உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்

பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம், முதல் நாளிலிருந்து 48 நாட்கள் விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இதற்காக இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிவார்கள். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து, மாலையணிந்து விரதத்தை துவக்கினார். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். 


தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து பெண்கள் தங்களது இல்லத்தின் வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் நடக்கும். இதேபோல் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி கோவில்களுக்கு சென்று குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.இன்று மாதப்பிறப்பினை தொடர்ந்து காலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க, தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாலை அணிந்து விரதம் துவங்கினர். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், வடபழநி முருகன் கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய வந்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !