சபரி சாஸ்தா அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :335 days ago
பெரியபட்டினம்; பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை யாதவர் தெருவில் உள்ள சபரி சாஸ்தா அய்யனார் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. சபரிமலை யாத்திரைக்காக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். உற்ஸவர் ஐயப்பனுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. காலை, மாலை நேரங்களில் பஜனை, நாமாவளி, கூட்டு பிரார்த்தனை, சரணகோஷம் நடந்தது. பூஜைகளை குருசாமி கணேசன் செய்திருந்தார். டிச.25ல் கோயிலில் ஆராட்டு விழா, பேட்டை துள்ளல், உற்ஸவ மூர்த்தி புறப்பாடு, அன்னதானம் நடக்கிறது.