ஆலாந்துறை அஷ்ட பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா
ADDED :423 days ago
கோவை; சிறுவாணிசாலை ஆலாந்துறை அருகே நாதே கவுண்டன்புதூரில் அமைந்துள்ள கொங்கு காசி என்று அழைக்கப்படும் அஷ்ட பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவில் உலக நலன் வேண்டி மகா யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதற்காக 206 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது. 206 தம்பதியர்கள் பைரவர் வேள்வியில் பங்கேற்றனர். தொடர்ந்து, பைரவர் திருவீதி உலாவும் நாம சங்கீர்த்தன ஊர்வலமும், மகா அன்னதானமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.