பகவதி தேவநாயகி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :325 days ago
அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட ஆயிக்கவுண்டன்பாளையம் ரோட்டில் ஸ்ரீ பகவதி தேவநாயகி அம்மன் கோவிலில், கடந்த 13ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, ஸ்ரீ பகவதி தேவநாயகி அம்மன் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.