திருப்புத்தூர் யோக பைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி விழா துவக்கம்
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் கூடிய சம்பக சஷ்டி விழா தொடங்கியது. குன்றக்குடி ஆதினத்தை சேர்ந்த இக்கோயிலில் பைரவர் சன்னதியில் வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை சம்பக சஷ்டி காலமாக கருதப்படுகிறது. இதற்காக நேற்று காலை 9:30 மணிக்கு அஷ்ட பைரவ யாகம் துவங்கியது. சிவாச்சாரியார்கள் பைரவர், ரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் யாக பூஜைகளை நடத்தினர். யாகசாலையில் இருந்த கலசங்கள் புறப்பட்டு, பைரவர் சன்னதியில் சேர்த்தனர். அங்கு 16 வித திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். சந்தனக்காப்புடன் வெள்ளி கவசத்தில் பைரவர் எழுந்தருளினார். நேற்று மாலை 4:30 மணிக்கு அஷ்ப பைரவயாகம் துவங்கி, இரவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் காலை மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்து, டிச., 6ல் சம்பக சஷ்டியிடன் விழா நிறைவு பெறும்.