உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சோமவார 108 சங்காபிஷேகம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சோமவார 108 சங்காபிஷேகம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் மற்றும் ஆதித் திருத்தளிநாதர் கோயிலில்களில் சோமவாரம் மூன்றாம் திங்கட்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட  இக்கோயில்களில் மூலவருக்கு கார்த்திகை  திங்கள் சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சன்னதியில் 108 சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கப்பட்டு,  மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !