புஷ்ப அலங்காரத்தில் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :630 days ago
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.