உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் குவியும் பக்தர்கள்; தரிசனத்திற்கு 3 மணிநேரம் காத்திருப்பு

சபரிமலையில் குவியும் பக்தர்கள்; தரிசனத்திற்கு 3 மணிநேரம் காத்திருப்பு

சபரிமலை; சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


சபரிமலையில் மண்டலபூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க 18ம் படி முன் இருமுடியுடன் பக்தர்கள் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்திருந்து தரிசனம் செய்தனர்.  நவ.,16-ல் சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது. நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 18 படி ஏறுவதற்கான கியூ எல்லா நாட்களிலும் சரங்குத்தியையும் கடந்து மர கூட்டம் வரை காணப்படுகிறது. இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக  3 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மலை ஏறும் போது பக்தர்கள் களைப்பாறுவதற்கு வசதியாக ஸ்டீல் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை மற்றும் வெயிலில் இளைப்பாற வசதியாக நவீன ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !