உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை ஐயப்பனுக்கு தரமான சந்தனம் : வனத்துறையிடம் வாங்கும் தேவசம்போர்டு

சபரிமலை ஐயப்பனுக்கு தரமான சந்தனம் : வனத்துறையிடம் வாங்கும் தேவசம்போர்டு

சபரிமலை; தனியார் நிறுவனங்கள் வழங்கிய சந்தனத்தின் தரம் குறைவாக இருந்ததை தொடர்ந்து ஐயப்பனின் களபாபிஷேகத்துக்கு வனத்துறையிடம் இருந்து தேவசம்போர்டு நேரடியாக சந்தன கட்டைகள் வாங்குகிறது.


சபரிமலையில் ஐயப்பனுக்கு நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்று களபாபிஷேகம். மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக இது நடைபெறும். சந்தன கட்டைகளை அரைத்து திரவ நிலையில் சந்தனம் எடுக்கப்பட்டு அது வெள்ளிக் குடத்தில் நிறைக்கப்பட்டு தந்திரி சிறப்பு பூஜை செய்வார். பின்னர் மேளதாளம் முழங்க இந்த சந்தனக்கூடம் கோயிலை சுற்றி வலம் வந்த பின்னர் ஸ்ரீ கோயிலுக்குள் கொண்டு சென்று ஐயப்பன் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு 38 ஆயிரத்து 400 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. நான்கு பேர் முன் வரிசையில் தரிசனம் செய்ய முடியும். இதற்கு தேவையான சந்தனம் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சந்தனத்தின் தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேவசம்போர்டு நேரடியாக கேரள வனத்துறையிடமிருந்து சந்தன கட்டைகள் வாங்குகிறது. சந்தன கட்டைகள் மொத்தமாக வாங்கப்பட்டு தேவசம்போர்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவை இயந்திரம் மூலம் தினமும் அரைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !