மார்கழி பிறந்தது.. திருப்பாவை பட்டு அணிந்து ஆண்டாள் தரிசனம்
ADDED :300 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டு அணிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு தான் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டுசேலையை அணிந்து ஆண்டாள், ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கண்ணாடி மாளிகையில் ஆண்டாள்,ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார், கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். இதனை முன்னிட்டு ஆண்டாள் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் பஜனை பாடி வழிபாடு நடத்தினர்.