திருச்செந்துார் கோயில் யானை ‘தெய்வானைக்கு’ கஜபூஜை
ADDED :307 days ago
திருச்செந்துார்; திருச்செந்துார் கோயில் யானை தெய்வானைக்கு கஜ பூஜை நடந்தது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மாதம் 18ம் தேதி யானை தெய்வானை(26) தாக்கி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் வனத்துறை, கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பில் யானை இருந்து வருகிறது. சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு யானை தங்கும் இடத்தில் கஜபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன், கால்நடை உதவி டாக்டர் அருண், இன்ஸ்பெக்டர் அர்னால்டு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் யானையை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றனர்.