உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மண்டல கால பூஜை; பாதுகாப்பு பணியில் ஹெலிகாப்டர்

சபரிமலையில் மண்டல கால பூஜை; பாதுகாப்பு பணியில் ஹெலிகாப்டர்

சபரிமலை; சபரிமலையில் மண்டல கால பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரளா போலீசார், நேற்று ஹெலிகாப்டரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் 12:00 மணிக்கு சபரிமலை கோவிலின் மேற்பகுதியில் தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர், பலமுறை அப்பகுதியில் வட்டமடித்தது. இதுபற்றி, சபரிமலையில் பணியில் உள்ள மத்திய அதிவிரைவு படை போலீஸ் உள்ளிட்ட எந்த பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படாததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் ஏ.டி.ஜி.பி., ஸ்ரீஜித் உத்தரவில், ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெற்றதாக தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !