அருளாளர் சந்ததம் பால் சுவாமிகள் மடாலயத்தில் மண்டலாபிஷேகம்
ADDED :352 days ago
அலங்காநல்லூர்; அலங்காநல்லூரில் அருளாளர் சந்ததம் பால் சுவாமிகள் மடாலயத்தில் மண்டலாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் மறுதினம் முதல் நடந்த மண்டல பூஜை இன்று நிறைவு செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. மூலவர் முன்பு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடந்தது. பின் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு சங்குகளில் இருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.