திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதினம்
ADDED :242 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார். திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலிலுக்கு மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் வந்தார். அவருக்கு ராமநாதபுரம் தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சன்னதியில் நடந்த தீபாராதனையில் கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். கோயிலில் நடந்து வரும் திருப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.