மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
ADDED :284 days ago
மதுரை; மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயில், அதன் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பகல் பத்து, ராப்பத்து உற்ஸவம் டிச.31 முதல் ஜன. 19 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக இன்று ஜன. 10ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5:15 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அவ்வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.