உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பரங்குன்றம் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால் நேற்று மாலை கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள பெரிய கதவு திறக்கப்பட்டு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு முத்தங்கி அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் முடிந்து காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் உற்சவர்கள் அருள்பாலித்தனர். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமாகி இரவு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !