மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
263 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
263 days ago
பாலக்காடு; பாலக்காட்டில் என்.எஸ்.எஸ்., யூனியனின் சார்பில் நடந்த "மெகா திருவாதிரைக்களி நடனம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு தாலுகா என்.எஸ்.எஸ்., (நாயர் சர்வீஸ சொசைட்டி) என்ற அமைப்பின் 70ம் ஆண்டு விழா இன்று மாலை கோட்டைமைதானத்தில் நடந்தன. விழாவை அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் உதயபானு துவக்கி வைத்தார். பாலக்காடு தாலுகா தலைவர் கே.கே., மேனன் தலைமை வகித்தார். பாலக்காடு தொகுதி எம்.பி., ஸ்ரீகண்டன் மற்றும் எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்புரையாற்றினார். விழாவையொட்டி கேரள பாரம்பரிய நடனமான "மெகா திருவாதிரைக்களி நடந்தன."வானவில் வண்ணங்கள் என்ற தலைப்பில் நடந்த "மெகா திருவாதிரைக்களி நடனத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து யூனியன் கீழ் செயல்படு 1770 மகளீர் கலந்துகொண்டுள்ளனர். இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர்.
263 days ago
263 days ago