உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. கோவிலில் மார்கழி எனும் தனுர் மாத சிறப்பாக பகல் பத்து உற்சவம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. திருக்கல்யாண வைபத்திற்கு பின் கோவிலில் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் உட்பிரகாரம் வலம் வந்தபின் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். மகா சங்கல்பத்திற்குபின் சேவை, சாற்றுமுறை பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !