உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் மகாமண்டபம், அன்னதானக் கூடம் திறப்பு

குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் மகாமண்டபம், அன்னதானக் கூடம் திறப்பு

நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் விரிவுபடுத்தபட்ட மகாமண்டபம் மற்றும் அன்னதானக் கூடம் திறப்பு விழா மற்றும் கோவிலுக்கு சமர்ப்பிக்கும் விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து மூலவர் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் கோவிலில் உள்ள உப தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை நிர்வாகி மணிமாறன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !