பழநி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்
பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது
பழநி கிரிவீதி, சன்னதி வீதி சந்திப்பில் பாத விநாயகர் கோயில் அருகே கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி ஜன.3ல் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகம் பூஜைகள் துவங்கின. யாக சாலையில் நான்கு கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டது. அதன் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இரு சன்னதிகளுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.